வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (20:37 IST)

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

Cleaning
மதுரையில் மனிதக் கழிவுகளை ஒப்பந்த ஊழியர் ஒருவர் வெறும் கைகளால் சுத்தம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றது. பாதாள சாக்கடைக்கு உள்ளே இறங்கி மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 
 
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள வைகை ஆற்றின் கரையில் ஓபுளாபடித்துறை பகுதியில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனைச் சரி செய்வதற்காக மதுரை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கினார். 


எந்த விதமான பாதுகாப்பு உபகரணமும், கைகளுக்குக் கையுறைகளும் இல்லாமல் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றினார். தற்போது இந்த வீடியோ காட்சி  இணையத்தில் வைரலாகி வருகிறது.