1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வியாழன், 25 மே 2023 (16:10 IST)

அதிமுக ஆட்சியில் நீடித்து இருந்தால் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி இருப்போம்: ஜெயக்குமார்

jayakumar
அதிமுக ஆட்சியின் நீடித்திருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடியிருப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான் அதிமுக மற்றும் திமுகவின் கொள்கை என இரு கட்சிகளுமே கூறி வருகின்றன. சமீபத்தில் கூட அமைச்சர் செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆட்சியில் நீடித்திருந்தால் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி இந்நேரம் அனைத்து கடைகளையும் மூடியிருப்போம் என்று தெரிவித்துள்ளார் 
 
அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளுமே டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்து வருகின்றன என்றும் ஆனால் வெற்றி பெற்ற பின் கடைகளை மூடுவது குறித்து அறிவிப்பு வெளியாவது இல்லை என்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்
 
Edited by Mahendran