வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2023 (07:54 IST)

பெரியார் சிலை அகற்ற வேண்டும் என்ற அண்ணாமலை பேச்சு.. ஜெயகுமார் பதிலடி..!

தமிழகத்தின் கோவில்களுக்கு முன் உள்ள பெரியார் சிலைகள் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அகற்றப்படும் என அண்ணாமலை பேசியதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் 
 
சமீபத்தில் என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தின் போது ஸ்ரீரங்கம் முன் கோயில் முன் இருக்கும் பெரியார் சிலை உள்பட கோவில்களுக்கு முன் உள்ள அனைத்து பெரியார் சிலைகளும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நீக்கப்படும் என்று தெரிவித்தார். 
 
இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில் பெரியார் சிலை அகற்றம் செய்யப்படும் என பேசுவது அண்ணாமலைக்கு பின்னடைவு என்றும் கண்டிப்பாக தமிழ்நாடு இதை ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார் 
 
ஒரு தலைவர் புகழ் போற்றப்பட வேண்டும், அதுதான் மாண்பு, மரியாதையும் கூட. தலைவர்கள் புகழை சிதைக்கும் வகையில் எந்த ஒரு கருத்து தெரிவித்தாலும் அது முகம் சுழிக்கும் கருத்தாகவே கருதப்படும் என்று கூறினார்.
 
Edited by Siva