திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (13:00 IST)

அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா?. செல்லூர் ராஜு

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து கோயில்களுக்கு முன் உள்ள பெரியார் சிலை அனைத்தும் அகற்றப்படும் என்றும், இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்ததை அடுத்த இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். 
 
அண்ணாமலை சொன்னதற்காக அறநிலைத்துறை கலைக்க முடியாது என்றும் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் என்றும் கூறினார். 
 
மேலும் அறநிலைத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பெரிய கோயில்களின் வருவாயில் தான் சிறிய கோயில்கள் இயங்கி வருகிறது என்றும் தெரிவித்தார். 
 
அதேபோல்  அமைச்சர் சேகர்பாபு இது குறித்து கூறிய போது திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை  நாத்திகர்கள், ஆத்திகர்கள் என்று பாகுபாடு கிடையாது என்றும் பெரியார் சொன்ன நல்ல கொள்கைகளை ஏற்றுக் கொள்வோம் இந்து மதத்தில் உள்ள நல்ல கொள்கைகளையும் ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறினார். 
 
மேலும் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்பதால் அண்ணாமலை கூறியதை பற்றி பெரிது படுத்த வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran