நாங்கள் ஒன்றும் பாதபூஜை செய்து பதவி வாங்கவில்லை – முரசொலி கிண்டலுக்கு ஜெயக்குமார் பதில் !

Last Modified வெள்ளி, 19 ஜூலை 2019 (12:57 IST)
முரசொலியில் தன்னைப் பற்றி வந்த விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் கூறியுள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நேற்றைய தலையங்கத்தில் அதிமுக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர்களை கடும் விமர்சனங்கள் செய்துள்ளது. மேலும் திமுகவின் 37 எம்பிக்கள் என்ன செய்கிறார்கள் என்று அதிமுகவினர் கேட்டதற்கும் அந்த தலையங்கத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரை முந்திரிக்கொட்டை மந்திரி என விமர்சனம் செய்தது. மேலும் இந்தி எதிர்ப்பில் இரட்டை வேடம் போடுவதாகக் கூறியது.
 
இதையடுத்து இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியிலேயே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் எப்போதும் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம். என்னை முரசொலியில் விமர்சிக்கிறது. திமுகவைப் போல், டெல்லிக்கு, சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு பாதபூஜை செய்து பதவி வாங்கவில்லை.’ என பதிலளித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :