வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (15:52 IST)

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு !

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு சிறை என்பதால் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.   கூடிய விரையில் அவர் எம். பி ஆக தேர்வு செய்யப்பட உள்ளார்.
மேலும் தன் மீதான வழக்குக்கு எதிராக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இந்நிலையில் இன்று கோர்ட்டுக்கு வந்த வைகோவுக்கு, நீதிபதி ,மேல் முறையீட்டு வழக்கு மீதான விசாரணை முடியும் வரை  ,சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறைத்  தண்டனையை நிறுத்தி வைத்ததுடன்  வைகோவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
அதில் நீதிபதி கூறியுள்ளதாவது :
 
இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் யோசித்து பேச வேண்டுமெனவும், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேச வேண்டும் என வைகோவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.