வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 20 டிசம்பர் 2021 (15:01 IST)

மன்னிப்பு விவகாரம்: ஓபிஎஸ் கருத்துக்கு ஜெயகுமார் கண்டனம்!

மன்னிப்பு கேட்டால் யாரையும் அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம் என ஓபிஎஸ் கூறிய குட்டிகதைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் ஒரு கதை மூலம் தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வதே நல்ல தலைமைக்கு அழகு என கூறியிருந்தார் 
 
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறிய இந்த கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் கூறிய குட்டி கதை சசிகலாவுக்கு பொருந்தாது என்றும் சசிகலா இல்லாமல் அதிமுக தற்போது நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதிலிருந்தும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஓபிஎஸ் தயாராக இருப்பதாகவும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.