செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (08:57 IST)

நிவாரணம் போதுமானதாக இல்லை: நெல்லை பள்ளி விபத்து குறித்து ஓபிஎஸ்

நிவாரணம் போதுமானதாக இல்லை: நெல்லை பள்ளி விபத்து குறித்து ஓபிஎஸ்
நெல்லையில் சுவர் இடிந்ததால் 3 பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலியான மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை போதுமானதாக இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
நெல்லையில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சமும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சமும் வழங்கப்படுவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவித்திருந்தனர்
 
இந்த அறிவிப்பு குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியபோது, ’நெல்லை பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் போதுமானதாக இல்லை என்றும் அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்
 
மேலும் விபத்திற்கு காரணமான பள்ளி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிதி நிலையை காரணம் காட்டி அரசு பள்ளிகளை சீரமைப்பதில் அரசு மெத்தனம் காட்டக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்