மக்களுக்கு ஷாக் நியூஸ் - “மீண்டும் உயரும் சொத்து வரி”..!
சென்னையில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2022 ஏப்ரல் 1ஆம் தேதி சொத்து வரி உயர்த்தப்பட்டது. சென்னையில் கடந்த முறை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50%ல் இருந்து 150% வரை உயர்த்தப்பட்டது. இடம், கட்டடத்தின் அளவை பொறுத்து வரியில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 6% வரை சொத்து வரி உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் லலிதா, நிலைகுலு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து வரியை மீண்டும் உயர்த்த கூடாது என தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.