வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (19:49 IST)

தினகரன் பதவியேற்பு: அக்கறை காட்டாத ஜெயா டிவி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது தொகுதியில் நடந்த முதல் தேர்தலில் டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
 
இந்த வெற்றியை அரசியல் கட்சிகள் பல மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கின்றனர். பலம் வாய்ந்த அதிமுக, திமுக கட்சிகளின் இரட்டை இலை, உதய சூரியன் சின்னங்களை அநாயசமாக தோற்கடித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சுயேட்சை வேட்பாளர் தினகரனின் குக்கர் சின்னம்.
 
இந்த வெற்றியை தினகரனின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இன்று நடந்த அவரது பதவியேற்பு விழாவை அமோகப்படுத்தினர் அவரது ஆதரவாளர்கள். ஆனால் அவர்கள் ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சி இதனை பேருக்கு ஒளிபரப்பிவிட்டு அப்படியே அமைதியாகிவிட்டார்கள்.
 
சசிகலா சிறையில் இருந்து பரோலில் வந்தபோதும், தினகரன் திகாரில் இருந்து வெளியே வந்தபோதும் ஏர்போர்ட்டில் இருந்து வீடு வரை ஒளிபரப்பு செய்த ஜெயா தொலைக்காட்சி இந்தமுறை தினகரனின் பதவியேற்பு விழாவை ஏதோ கடமைக்கு ஒளிபரப்புவது போல ஒளிபரப்பினர். ஒருவேளை ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரத்தில் கோபமாக இருக்கும் சசிகலாவின் உத்தரவால் இந்த நடவடிக்கையை விவேக் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.