புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (07:21 IST)

வங்கக்கடல் புதிய புயலுக்கு வைக்கப்பட்ட பெயர் இதுதான்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவானது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
 
அந்தமான் கடல் பகுதியில் மையம் கொண்டிருக்கும் இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா நோக்கி நாளை மறுநாள் நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
இந்த நிலையில் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவரும் நிலையில் இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் சூட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஜாவத் புயல் என்னென்ன சேதங்களை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்