செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:05 IST)

வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை- வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 12மணி நேரத்தில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர- ஒடிஷா இடையே கரையை கடப்பதால் தமிழகத்தில் மழை க்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது. 
 
மேலும், வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை எனவும் எந்த எச்சரிக்கையும் இல்லை என புவியரசன் தெரிவித்துள்ளார்.