வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (00:57 IST)

இவர்கள் தான் வருங்கால சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

ஒருபுறம் தற்காலிக ஓட்டுனர்கள் ரிவர்ஸ் எடுக்க தெரியாமல், சுவற்றில் மோதி, பள்ளத்தில் பேருந்தை விட்டு விபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் தற்காலிக கண்டக்டர்கள் செய்யும் காமெடியை பயணிகள் ரசித்து வருகின்றனர்.

ஒருசில கண்டக்டர்களிடம் மட்டுமே காக்கி சட்டை இருப்பதால் பெரும்பாலான கண்டக்டர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து டிக்கெட் வழங்கி வருகின்றனர். இவர்களில் ஒருசிலர் ஒரு படி மேலே போய் லுங்கியில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவர்கள் கண்டக்டர் பைக்கு பதிலாக மஞ்சப்பையை ரூபாய் போட வைத்துள்ளது இன்னும் காமெடியை வரவழைக்கின்றன

கண்டக்டராக இருந்து தனது ஸ்டைலின் காரணமாக இன்று சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் போல், லுங்கியில் டிக்கெட் கொடுக்கும் இந்த தற்காலிக கண்டக்டர்கள் நாளை சூப்பர் ஸ்டாராக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை