ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (21:37 IST)

ரஜினி கமலை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் பாக்யராஜ்

நான் அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்டேன். இன்னும் ஒரு மாதத்தில் அறிவிப்பேன் என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

 
ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்தது. சசிலகா அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்று சிறைக்கு சென்ற பின் சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து டுவிட்டரில் அரசியல்வாதிகளை விமர்சித்து வந்த கமல் விரைவில் களமிறங்குவேன் என்று அறிவித்தார்.
 
வெகு காலமாக அரசியலில் களமிறங்குவார் என ரசிகர்களாலும் தமிழக மக்களாலும் எதிர்பார்க்க ரஜினி கடந்த மாதம் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இதையடுத்து தற்போது நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நேரடி அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் அரசியலுக்கு வர முடிவு செய்து விட்டேன். அதற்கான வாய்ப்பும், காலமும் நெருங்கிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒரு மாதத்தில் முடிவை சொல்லிவிடுவேன். யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என அப்போது சொல்வேன் என்று கூறியுள்ளார்.