1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2023 (15:54 IST)

நாயை ‘நாய்’ என்று அழைத்த நபரை கொலை செய்த நாய் உரிமையாளர்!

Dog
நாயை நாய் என்று அழைத்த பக்கத்து வீட்டுக்காரரை நாயின் உரிமையாளர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு என்ற பகுதியில் 65 விவசாயி ஒருவர் பக்கத்து வீட்டில் உள்ள நாயை நாய் என்று அழைத்தார். 
 
இதனை அடுத்து தான் வளர்த்து வரும் நாயே நாயின் பெயர் டேனியல் என்றும் அதனை நாய் என்று அழைக்கக்கூடாது என்றும் நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்
 
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில் ஒரு கட்டத்தில் நாயின் உரிமையாளர் பக்கத்து வீட்டுக்காரரை பயங்கரமான தாக்கினார். இதனால் அவர் மயங்கி விழுந்த அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து நாயின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 
Edited by Siva