வாக்களிக்கும் போது ஜாதி மதம் பார்க்க வேண்டாம் – ஜக்கி வாசுதேவ் கருத்து!

Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (16:05 IST)

ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கோவையில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஈஷா நிறுவனரும் ஆன்மீக வாதியுமான ஜக்கி வாசுதேவ் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’தேர்தல் என்பது வெறும் நிகழ்ச்சி இல்லை. அது ஒரு நம் மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தன்மை. யாராக இருந்தாலும் ஒரே ஓட்டுதான். ஜனநாயகத்தில் நாம் அனைவரும் சமம் என்று புரிந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கும் போது ஜாதி மதம் என்று பார்க்கவேண்டும். யார் நம் மாநிலத்துக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவருவார்களோ அவர்களுக்கு வாக்களித்தால் போதும்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :