வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (16:26 IST)

தற்கொலைக்கும் தயங்காத ஜெகத்ரட்சகன்: என்ன ஆச்சு திமுகவில்..???

புதுச்சேரி யூனியன் பிரதேச திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் மேடையில் தற்கொலை செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார். 

 
வருகிற ஜனவரி 21 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று  சட்டப்பேரவையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இந்நிலையில் புதுச்சேரியில் தற்போது திமுக கூட்டணியான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வரும் தேர்தலில் திமுக ஆட்சியில் அமர முடிவெடுத்திருக்கிறது. எனவே புதுச்சேரி தேர்தலில் திமுக கூட்டணியை ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இதனிடையே ஜெகத்ரட்சகன்,  புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். இதை நான் நிறைவேற்றி காட்டுவேன். அப்படி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியிருக்கிறார். 
 
சில மாதங்களுக்கு முன்னர் ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணையவிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், இதை அவர் மறுத்தார் என்பது குற்ப்பிடத்தக்கது.