1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajnikanth club organizer joins DMK

கட்சி தொடங்காத ரஜினி; திமுக பக்கம் திரும்பிய நிர்வாகிகள்! – திமுகவில் இணைந்த ஸ்டாலின்!

Tamilnadu
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை கைவிட்ட நிலையில் ரஜினி ரசிகர்கள் பலர் திமுகவில் இணைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடங்குவதாக அறிவித்து பின்னர் உடல்நல குறைவால் கட்சி தொடங்குவதை கைவிட்டார். அவர் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் தன்னை வேதனைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனால் அவரது முடிவை ஏற்று ரசிகர்கள் தொந்தரவு செய்ய வேண்டாமென மக்கள் மன்றத்தினரும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகியான தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட பல ரஜினி மன்றத்தினர் தற்போது திமுகவில் இனைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தூத்துக்குடி ஸ்டாலின் பெயரில்தான் ‘மக்கள் சேவை கட்சி’ பதிவு செய்யப்பட்டது என்பதும், ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பேட்டி அளிக்கும் அதிகாரம் இவருக்கு வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேலும் பல ரஜினி ரசிகர்கள் திமுகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
காத்து வாங்கும் தடுப்பூசி மையங்கள்!? – ஆர்வம் காட்டாத முன்கள பணியாளர்கள்!