1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK general secretary Duraimurugan hospitalized

துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: திமுக பிரபலங்கள் அதிர்ச்சி!

துரைமுருகன்
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வரும் துரைமுருகன் அவர்கள் மீண்டும் உடல் நலக்குறைவால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனை அடுத்து திமுக தொண்டர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்ந்து வருகின்றனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுகவின் பிரமுகர்கள் அவரது உடல்நலன் குறித்து அவரது குடும்பத்தினர்களிடமும், மருத்துவர்களிடமும் கேட்டு விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துரைமுருகன் இன்று மாலை அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
Ground Report:: தமிழகத்தில் முதல் தடுப்பூசி போட்டு கொண்ட பெண் இவர்தான்!