1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. jagan mohan reddy advised vijay not to talk about bjp

பாஜகவை சீண்டாதீங்க!.. இதை மட்டும் செய்யுங்க!.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன அரசியல் பிரபலம்!..

vijay
நடிகர் விஜய் தவெக எனும் அரசியல் கட்சியை துவங்கிய போது ‘திமுக எங்கள் அரசியல் எதிரி.. பாஜக எங்கள் கொள்கை எதிரி’ என கூறினார். தொடர்ந்து பல மேடங்களிலும் பாஜகவையும் அவர் விமர்சித்து வருகிறார்.. குறிப்பாக பாஜகவின் அடிமையாக அதிமுக இருக்கிறது என்றும் பேசி வருகிறார்.. இது பாஜகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது..

விஜய் பாஜகவை தொடர்ந்து சீண்டி வருவதால்தான் அவரை சிபிஐ விசாரணைக்கு டெல்லிக்கு கூப்பிட்டார்கள் மற்றும் அவரின் ஜனநாயகன் படத்திற்கும் சிக்கல் வந்ததாக அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஒருபக்கம், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்காமல் போனதன் பின்னணியிலும் பாஜக பெயர் அடிபடுகிறது.

இது விஜய்க்கும் ஓரளவுக்கு புரிந்திருக்கிறது. இந்நிலையில்தான், சமீபத்தில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் பேசிய விஜய் ‘இப்போது நடப்பது சட்டசபை தேர்தல்.. ஆட்சியில் இருப்பது திமுக.. அவர்களை பற்றிதான் பேசுவோம்.. மற்றவர்கள் பற்றி ஏன் பேச வேண்டும்?’ என கேள்வி எழுப்பினார்..
vijay

விஜியிடம் இந்த மாற்றம் ஏற்பட்டதுக்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. சமீபத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்ப திருமண விழா சென்னையில் நடந்தபோது தவெக தலைவர் விஜய் அதில் கலந்து கொண்டார். அப்போது ஜெகன் மோகன் ரெட்டிடம் விஜய் அரசியல் தொடர்பாக சில ஆலோசனைகளை கேட்டதாக தெரிகிறது..

அப்போது ‘தவெக ஒரு மாநில கட்சி.. எனவே, நீங்கள் பாஜக பற்றி விமர்சித்து பேசவேண்டாம்... திமுகவை மட்டுமே விமர்சியுங்கள்’ பாஜகவை பற்றி நீங்கள் பேசுவதால்தான் உங்களுக்கு தொடர்ந்து சிக்கல் வருகிறது’ என்று ஜெகன் மோகன் ரெட்டி சொல்ல விஜய்யும் அதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். எனவே தேர்தல் முடியும் வரை விஜய் பாஜக பற்றி பேச மாட்டார் என்கிறார்கள்...
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அரசியலில் விஜய் பின்பற்றுவதை இவரையா?!.. கசிந்த தகவல்...