1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 பிப்ரவரி 2026 (13:22 IST)

காங்கிரசுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம்.. திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை..!

காங்கிரசுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம்.. திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை..!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைத்து 70 நாட்களாகியும், திமுக தரப்பில் உரிய முன்னேற்றம் இல்லை என சாடினார். "காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டால் நாங்களும் மரியாதை கொடுக்க மாட்டோம்; திருப்பி அடிப்போம்" என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
மேலும், காங்கிரஸ் குறித்து அவதூறாக பேசும் திமுக அமைச்சர்கள் மற்றும் மதுரை நிர்வாகி தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், "நாங்கள் கேட்பது கமிஷன் அல்ல, மரியாதைதான்" என்று ஆவேசமாக தெரிவித்தார். 
 
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்றும், தனக்கு எம்பி பதவி முக்கியமல்ல என்றும் அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
காங்கிரஸை மதிக்காதவர்களுக்கு இனி பயம் வர வேண்டும் என அவர் பேசியது, திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டில் பெரும் இழுபறி நீடிப்பதை உறுதிப்படுத்துகிறது.
 
Edited by Siva