ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 6 ஜனவரி 2019 (19:28 IST)

அதிமுகவின் அழைப்பு! ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த தீபா

அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் இதுகுறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு அதன்படி நடந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜெ.தீபா இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டி குறித்து கருத்து கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'ஜெ தீபா உள்பட யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்வோம் என்று கூறினார்

இந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களின் அழைப்பு குறித்து சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா கூறியபோது, 'ஓபிஎஸ் அவர்களின் அழைப்புக்கு நன்றி. அவருடைய அழைப்பு எனக்கு மட்டுமின்றி எங்கள் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. விரைவில் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து அதிமுகவுடன் இணைந்து செயலாற்றுவோம். புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் கட்டிக்காத்த அதிமுகவுக்கு எதிராக நாங்கள் இதுவரை எந்த நிலைப்பாடும் எடுத்ததில்லை என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதா அவர்களின் உறவினர் என்ற வகையில் அவருடைய மரணம் குறித்த சந்தேகத்தை தொடர்ந்து எழுப்புவோம். அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டாலும் அந்த நிலைப்பாட்டில் இருந்து எந்த மாறுதலும் இருக்காது' என்று அவர் கூறினார்