திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 6 ஜனவரி 2019 (14:42 IST)

அதிமுகவுடன் இணைய விருப்பம்: தீபாவின் திடீர் மாற்றம்

சமீபத்தில் தினகரன் ஆதரவாளராக இருந்த கருணாஸ் எம்.எல்.ஏ திடீரென அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுத்த நிலையில் தற்போது தனி அமைப்பாக செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறிய தீபா, திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகவு வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட தொண்டர்களிடம் கருத்து கேட்கவுள்ளதாகவும், தொண்டர்களின் மனநிலையை பொருத்து விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தீபாவின் கருத்து குறித்து கூறிய துணை முதல்வர் ஓபிஎஸ், 'ஜெ.தீபா உள்பட யாரையும் அதிமுக இணைத்துக்கொள்ள தயார் என்று கூறியுள்ளார்.