திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 6 ஜனவரி 2019 (14:55 IST)

திமுக வின் ஓட்டைப் பிரிக்கணும் – அதிமுக வின் மாஸ்டர் ப்ளான்!

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வின் ஓட்டுகளைப் பிரிக்க அதிமுக ஒருப் புதிய வழியைக் கண்டுபிடித்து அதை செயல்படுத்த மும்முரம் காட்டி வருகிறது.

திருவாரூர்  தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் அமமுக விற்கு இடையில்தான் போட்டி என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக வும் அமமுக வும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர் ஆனால் இன்னும் அதிமுக வேட்பாளர் குறித்து அறிவிக்கவில்லை.

என்னதான் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் திருவாரூர் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அதற்குத் துளிக் கூட நம்பிக்கை இல்லையாம். திருவாரூர் தொகுதி எப்போதுமே திமுக வின் கோட்டை. எம்.ஜி,ஆர. காலத்தில் இருந்து இன்றுவரை அதிமுக ஒரு தடவைக் கூட அங்கு வென்றதில்லை. ஏற்கனவே அதிமுக ஒன்றாக இருந்த போதே ஒன்றும் செய்யமுடியவில்லை. இப்போது தினகரன் வேறு பிரிந்து சென்று பாதி வாக்குகளப் பிரித்து விட்டார். அதனால் வெற்றிப் பெறக் கூட வேண்டாம். ஆனால் மரியாதையான வாக்குகளையாவதுப் பெற வேண்டும் என்றால் திமுக வின் ஓட்டுகளைப் பிரித்தால்தான் உண்டு என திட்டம் தீட்டுவதாகச் செய்திகள் வெளியாக  ஆரம்பித்தன.

கலைஞர் இறந்துள்ளதை அடுத்து நடக்கும் தேர்தல் என்பதால் அனுதாப ஓட்டுகள அதிகளவில் திமுக வுக்குக் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் ஓட்டுகளைப் பிரிக்க வேண்டுமென்றால் கலைஞர் குடும்பத்தில் இருந்து ஒருவரைத் திமுக வுக்கு எதிராக நிறுத்தினால்தான் உண்டு என நினைக்கிறது அதிமுக. அப்படியானால் ஸ்டாலின் மீது கோபத்தில் இருக்கும் அழகிரிதான் இதற்கு சரியான ஆளாக இருப்பார் என அழகிரியை திருவாரூரில் சுயேட்சையாக நிற்க வைக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளை முடுக்கி விட்டுள்ளது.

அழகிரிக்கு நெருக்கமான அதிமுக அமைச்சர் ஒருவர் மூலம் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. அழகிரியின் பதிலுக்குப் பின்னர் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.