திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 6 ஜூன் 2020 (00:00 IST)

முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவி செய்த அமைச்சர் விஜய்பாஸ்கர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் 78 பேருக்கு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ஆட்டோ ஓட்டுநரகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு 78 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கின்ற முத்துக்குமார் உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.