செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 5 ஜூன் 2020 (12:49 IST)

குசலம் விசாரித்த ஈபிஎஸ்: எதிர்க்கட்சியினர் மீதும் அக்கறை!!

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
 
திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
தீவிர சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.ல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று அவர் சுவாசிக்க செயற்கை சுவாசம் 80% தேவைப்பட்ட நிலையில், இப்போது 67 % போதுமானதாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
 
சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் உடல்நிலை முன்னேறி வருவதை அறிந்த திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.