வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (17:24 IST)

’சமோசா கடையில் ஐடி ரெய்டு.. கோடி கணக்கில் பணம் ! ஷாக்கான மக்கள்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு சமோசா, கச்சோரி கடைக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியில் முகேஷ் கச்சோரி என்ற கடை உள்ளது. இதில் சமோசா, கச்சோரி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.
 
பெரும்பாலான மக்களுக்கு இந்தக் கடையின் சமோசா பிடித்துக் போனதால், மக்களும் ஆர்வத்துடன் இவரது கடைக்கு வந்து சமோசா முதலியவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
 
 முகேஷ்  இந்தக் கடையின் உரிமையாளர். இவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கடையை ஆரம்பித்தார். தனது அன்றாட வருமானத்தை வங்கியில் சேமித்துவந்துள்ளார்.
 
இந்நிலையில் வருமான வரித்துறையினர், இவரது கணக்கை கண்காணிக்க ஆரம்பித்தனர். கடையில் அமர்ந்தும் அவரை டிராக் செய்தனர்
 
அதில் முகேஷ் கடைக்கு ஆண்டுக்கு ரூ. 60 லட்சம் முதல், 1 கோடி வரை லாபம் பார்ப்பதை கண்டுபிடுத்தனர்.மேலும் அவர் கடையினைப்  பதிவு செய்யாமல் இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
 
இந்நிலையில் தற்போது முகேஷ் தனது கடையின் செலவுகள் பற்றிய முழு விபரத்தையும் வருமான வரித்துறையினரிடம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஒரு சாதாரண சமோசா கடையில் கோடிக் கணக்கில் வருமான என அங்குள்ள மக்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறார்கள்.