புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (15:19 IST)

சென்னையில் பிளாஸ்டிக் கடத்தல் – 2.15 டன் சிக்கியது !

சென்னையில் பாரிஸ் கார்னர் பகுதியில் கிட்டத்தட்ட 2.15 டன் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஒருசில நாட்கள் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் அதாவது வியாபாரியாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடம் அபாரதம் வசூலிக்கப்படும் என்றும் அபராத தொகை அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரிஸ் கார்னர் பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து 143 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் போலிஸ் சோதனையில் சிக்கியுள்ளன. இந்தக் குற்றத்துக்காக எஸ்.கே. டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திடம் ரூ.25,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரியில் சுமார் 300 பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன. சென்னையில் இருந்து மிக அருகில் உள்ளதால் அங்கிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தல் நடைபெறுவதாக தெரிகிறது.