வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (12:06 IST)

ஆசிரியர்களின் பாத்திரங்களை கழுவும் மாணவி:வைரலாகும் வீடியோ

தஞ்சாவூர் அருகே உள்ள அரசு பள்ளியில், ஆசிரியர்களில் உணவுப் பாத்திரங்களை மாணவிகள் கழுவும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்திலுள்ள பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களை, ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைகளையும் செய்ய சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பல எழுந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது தஞ்சாவூர், பகுதியிலுள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில், ஆசிரியர்களின் உணவு பாத்திரங்களை கழுவுவது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவரின் பெயர் தையல் நாயகி. இந்த பள்ளியில் மொத்தம் 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த வீடியோவை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசரித்தபோது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் உணவு கொண்டு வருவார்கள் என்றும், அந்த உணவுப் பாத்திரங்களை அன்பாக மாணவர்கள் கழுவி தருவார்கள் என்றும் கூறுகிறது.

மேலும், சில விஷமிகள் இதனை தவறான கண்ணோட்டத்தோடு பரப்புகிறார்கள் என்றும் பள்ளி நிர்வாகம் கூறுகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து தொடக்க கல்வி அலுவலர் நடராஜன் தலைமையில் அப்பள்ளியில் ஆய்வு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.