’காமசூத்ராவை ’உயர்கல்வியில் கற்றுக்கொடுக்க புதிய கல்விக்கொள்கை ?
மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பாஜக அரசு மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பள்ளிகளிலும் இரு மொழியுடன் ( ஆங்கிலம் மாநில மொழி ) ஹிந்தியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த 436 பக்கங்களைக் கொண்ட புதிய கல்விக்கொள்கைக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்ப்பியது. குறிப்பாக தனிழகத்தில் அதிக விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தனர்.
இந்நிலையில் வாத்ஸாயயரா எழுதிய காமசூத்திரத்திற்கு 13 ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய யசோதரா என்பவரை இக்கல்விக்கொள்கையில் குறிப்பிடுள்ளார்கள். அதாவது யசோதரா எழுதிய ஜெயமங்கலா என்ற புத்தகத்தில் மொத்தம்ம் 512 கலைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை 21ஆம் நூற்றாண்டில் மாணவர்கள் எல்லா சவால்களையும் கடந்து வெற்றி பெறத்தான் உஇவர் கூறியுள்ள கலைகளை கற்ற வேண்டும் என்ற நோக்கில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்தோ என்று கல்வியாளர்கல் கேள்வி எழுப்புகிறார்கள்.
அப்படி ஒருவேளை ஜெயமங்கலாவுடைய உரைகள் பாடப்புத்தகத்தில் வந்தால்,காமசூத்ராவும் பாடத்திட்டத்தில் இடம்பெறலாம் என சந்தேகமாக உள்ளதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.