1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (09:34 IST)

போயஸ் கார்டனில் நுழைந்த வருமான வரித்துறை!

போயஸ் கார்டனில் நுழைந்த வருமான வரித்துறை!

வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சசிகலா, தினகரன் தொடர்புடைய பல இடங்களில் காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவை தினகரன் நேற்று பெங்களூர் சிறையில் சந்த்த நிலையில் இன்று இந்த சோதனை நடந்து வருகிறது.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகத்தில் அதிகமாக அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். தலைமைச்செயலாளர் வீடு, அலுவலகம், தலைமை செயலகம் என அதிரடியாக சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிரடியாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் என அவர் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியது.
 
ஆனால் தற்போது சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் போயஸ் கார்டனில் உள்ள டிடிவி தினகரனின் பழைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.