கொடநாடு எஸ்டேட்டிலும் சோதனை: ரவுண்டு கட்டி அடிக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள்
இன்று காலை முதல் ஜெயா டிவி மட்டுமின்றி அதனை சார்ந்த நிறுவனங்கள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் கொடநாடு பங்களாவிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஜெயா டிவி, இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீடு, நமது எம்ஜிஆர் அலுவலகம், டிடிவி தினகரன் வீடு, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வீடு, ஜாஸ் சினிமாஸ், விவேக் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருவதாகவும், இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வார்கள் என்றும், அதன் பின்னரே முறைகேடுகள் நடந்ததா? எந்த அளவுக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது போன்ற தகவல்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது