செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (07:09 IST)

ஜெயா டிவி அலுவலகத்தில் திடீர் வருமான வரி சோதனை

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 10 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


 


ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதை ஜெயா டிவி தனது செய்தியில் உறுதி செய்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்து பேசிய நிலையில் ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயா டிவி நிறுவனம் தங்களது வருமானம் குறித்து முறையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஜெயா தொலைக்காட்சி தொடர்புடைய மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.