1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. It may heavy rain in tamilnadu today

தமிழகத்தில் கனமழை பெய்யும் : வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கனமழை பெய்யும் : வானிலை மையம் எச்சரிக்கை

Tamilnadu
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகம் இன்று இடியுடன் கூடிய மழைய சந்திக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் “மேற்கு வங்கக் கடலின் வெளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரிரு பகுதிகளில் மழை பெய்யும்.
 
அதேபோல், மேற்கு வங்கக் கடல் பகுதியான ஒடிசாவை ஒட்டியுள்ள பகுதியில் வெளிமண்டலத்தில் உருவாகியிருந்த மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
காவிரி நீர் பிரச்சனை; சிம்பு அதை சொன்னாரா? : இணையத்தில் பரபரப்பு