புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (14:48 IST)

போதையில் சிக்கி மாணவர்கள் சீரழிவதை தடுக்க 'இது மிகவும் 'அவசியம் - டாக்டர் ராமதாஸ்

போதையில் சிக்கி மாணவர்கள் சீரழிவதை தடுக்க 'இது மிகவும் 'அவசியம் - டாக்டர் ராமதாஸ்

சமீபகாலமாகவே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதையில் சிக்கி வருவதாக செய்திகள் வெளியாகின்றது. குறிப்பாக பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களைக் குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது. 
 
இதைத் தடுக்கும் வகையில்,யூனியன் கிரேண்ட் கவுன்சில் என்ற யுஜிசி ஒரு அறிவிப்பு அறிவித்துள்ளது. அதில், கல்லூரி கல்லூரி மாணவர்கள்  போதைக்கு அடிமையாவதை தடுக்க மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
 
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
’கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று யு.ஜி.சி கூறியிருப்பது மிகச்சரியான நடவடிக்கை ஆகும். போதையில் சிக்கி மாணவர்கள் சீரழிவதை தடுக்க இது மிகவும் அவசியம். யு.ஜி.சிக்கு பாராட்டுகள்!; என தெரிவித்துள்ளார்.