ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:00 IST)

விஜயின் கட்சியை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல.! அமைச்சர் எ.வ.வேலு பேட்டி.!!

தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கமல்ல என  அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
 
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி, அப்பல்லோ சந்திப்பில் நடைபெறும் மேம்பாலம் கட்டும் பணி ஆகியவற்றை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கட்சிகள் தொடங்குவது ஜனநாயக உரிமை என்றார்.
 
தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கமல்ல என அமைச்சர் எ.வ.வேலு கூறினார். மேலும் நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், நாங்கள் யாரையும் கண்டு அஞ்ச மாட்டோம், பொறாமை கொள்ளமாட்டோம் என்று குறிப்பிட்டார்.

 
மக்கள் ஏற்றுக்கொண்டால் தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ந்து செயல்படுவார்கள் என்றும் யாரையும் தடுக்க வேண்டுமென்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.