வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (14:49 IST)

ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள்.. திருச்சி எஸ்பி விவகாரத்தில் நீதிபதி உத்தரவு..!

Madurai Court
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமூக வலைதளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பதிவு செய்த, ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்ப்பித்துள்ளது.
 
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அனைத்து கமெண்ட்களையும் பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாகவே பார்க்க முடிகிறது என  நீதிபதி பரத சக்ரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
 
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இவ்வழக்கில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் நேரடியாக எதுவும் கமெண்ட் செய்யாததால் முன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
 
முன்னதாக திருச்சி எஸ்பி வருண்குமார், அவரது மனைவி புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே ஆகிய இருவர் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் ஆபாச கருத்துக்களை வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரின் 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran