1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Issue of Womens Rights Fund Guidelines

மகளிர் உரிமைத் தொகை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

magalir urimai thogai
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
 

தமிழ்நாட்டில்  முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தபோது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர் குறித்த விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி விண்ணப்பித்தவர்களில் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் உரிமைத் தொகை பெற தகுதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த   நிலையில், கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில், குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி முலம் அனுப்படவுள்ளதாகவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது சோதிக்கப்படவுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தகவலும்  விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் 18 ஆம் தேதி முதல் அனுப்பப்படும். ஏற்கப்படாத விண்ணப்ப தார்கள் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் எனவும், மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
கரூர்: இளையோர் தடகளப் போட்டிக்கு செல்லும் 74 வீரர்கள்