வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (18:05 IST)

பெண்ணினத்திற்கு திராவிட கழகம் வழங்கிய அதிகாரக்கொடை - முதல்வர் முக.ஸ்டாலின்

திமுக அரசு அமைந்தது முதலாக தமிழ்நாட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திட்டம் மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில்,  மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: ''எல்லார்க்கும் எல்லாம் என்ற   நோக்கத்துடன் செயல்படும் திராவிட மாடலின் அனைத்து திட்டங்களுக்கும் ஒரு பொது நோக்கு உண்டு, அதுதான் சமூக நீதி. நீதிக்கட்சி தொடங்கி இன்றுவரை தமிழகத்தை  வழி நடத்தும் கோட்பாடு சமூக நீதி. சாதிய ஏற்றத்தாழ்வு,  ஆண் பெண் வேறுபாடுபாட்டை விதைக்கும் பால் பேதமும் இந்தியாவின் சமூக வளர்ச்சியை தக்கும் சக்தியாக காலம்காலமாக உள்ளது.

சமூகத்தின் சரி பங்காக இருக்கும் மகளிரின் வாழ்க்கை தரம், சுயமரியாதையும்   இதுபற்றி நான் அதிகமாக விளக்கத் தேவையில்லை.

கலைஞரின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வேண்டுமென்று  1929 ஆம் ஆண்டு  நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்   தீர்மானம் நிறைவேற்றப்பட்து. அதை 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் சட்டமாக நிறைவேற்றினார். இதுதான் பெண்ணினத்திற்கு திராவிட கழகம் வழங்கிய அதிகாரக்கொடை'' என்று கூறினார்.