1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஜூலை 2018 (18:37 IST)

ஏக்கர் கணக்கில் வனப்பகுதியை அனுமதியின்றி அபகரித்த ஜக்கி: சிஏஜி அதிர்ச்சி தகவல்!

சத்குரு ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்காக கோவை வனப்பகுதியில் அரசு அனுமதியின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அபகரித்துள்ளது அம்பலமாகியுள்ளது. 
 
கோவை மாவட்ட எல்லையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டது. 
 
இந்த யோகா மையம் அரசின் அனுமதி பெறாமல் வனத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பதாக சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது. அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஷா அறக்கட்டளை பூலுவாப்பட்டி கிராமத்தில் 32,856 சதுர அடி பரப்பளவில் பல கட்டடங்களை கட்ட கிராமப்புற பஞ்சாயத்து அனுமதி பெற்றுள்ளது. 
 
இது 1994 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மலை பாதுகாப்பு குழுவிடமிருந்து இதுதொர்பாக தடையில்லா சான்றிதழ் பெறாமலேயே இந்த கட்டடங்களை கட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.