1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 ஜூன் 2018 (17:47 IST)

விலைவாசி ஏறிப்போச்சு ; அகவிலைப்படி கிடைக்கவில்லை : ஊழியர்கள் புகார் (வீடியோ)

விலைவாசி உயர்ந்தும் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அகவிலைப்படி கிடைக்கவில்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் (TNSTC) பென்சன் நலச்சங்கப் பேரவையின்  ஒருங்கிணைப்பாளர் மருதமுத்து பேட்டியளித்துள்ளார்.

 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் (TNSTC) பென்சன் நலச்சங்கப் பேரவையின் மாநில கூட்டம், அதன் ஒருங்கிணைப்பாளர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. கரூரில் உள்ள வேம்புமாரியம்மன் ஆலயத்தின் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒய்வு பெறும் நாளன்று அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும்., மேலும், ஒய்வு பெற்றவர்களுக்கு கடந்த 2 ½ வருடங்களாக வழங்கப்பட வேண்டிய பஞ்சப்படி., DA., அதன் நிலுவைத்தொகையை வழங்க வேண்டுமென்றும், ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில்., 2010, 2015, 2016 ஆகிய ஆண்டுகளுக்கு திருத்தப்பட்ட ஒய்வூதியம் முன், 7 வது ஊதியக்குழு அடிப்படையில்., ஒய்வு பெற்ற அலுவலர்கள், பொறியாளர்கள், நிர்வாக பணியில் உள்ள கண்காணிப்பாளர்களுக்கும் உடனடியாக திருத்தப்பட்ட ஒய்வூதியம் வழங்கப்பட வேண்டுமென்றும், மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தினை ஒய்வு பெற்றவர்களுக்கும் விரிவு படுத்தவேண்டுமென்றும் என்று மொத்தம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
இந்நிகழ்ச்சியில் கோவை ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், மதுரை திருமுருகானந்த், சென்னை குப்புராஜ், கோவை ஷண்முகவேலாயுதம்,. கரூர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 
மேலும் இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (TNSTC) பென்சன் நலச்சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மருதமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ஒய்வு பெற்ற பென்சனர்களை அரசு கண்டுகொள்வதில்லை, 1 லட்சத்து 40 ஆயிரம் ஒய்வூதியர்களின் பிரச்சினை சம்பந்தமாக 2018ல் நடந்து முடிந்த 13 வது ஊதியக்குழு பென்சன் திட்டம் என்பது ஒரு நிரந்தரமில்லாது போல் உள்ளது. 
 
ஆகவே, 2 ½ வருட காலமாக அகவிலைப்படி வழங்கப்படாமல் இருந்து வருகின்றது. ஒய்வூதியர்களின் அடிப்படை கோரிக்கையை பேசி முடிக்காமல், அரசு காலம் தாழ்த்தி வருகின்றது. தற்போது 2 ½ வருடங்களில் 77 ஆயிரம் பேர் ஒய்வு பெற்றும் அகவிலைப்படிகள் தராமல், பேருந்து கட்டணம் உயர்ந்தும் இன்றும் ஒய்வூதியர்களை கண்டுகொள்ள வில்லை என்றும் குற்றம் சாட்டினார். பேட்டியின் போது ஏ.ஐ.டி.யு.சி கரூர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.
-சி. ஆனந்த குமார்