வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (19:15 IST)

பிரதமர் திட்டத்தின் கீழ் ரூ.45,000 வங்கி கணக்கில் டெபாசிட்!

கேவையை சேர்ந்த பெண் ஒருவரின் கனரா வங்கி கணக்கில் பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.45,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 
 
கோவை பெரியநாயக்கன்பாளையமத்தை சேர்ந்த பிருந்தா என்பவர் கனரா வங்கியின் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கி கணக்கில் ரூ.45,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. 
 
இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்த போதும், அதில் ரூ.45,000 இருந்துள்லது. எனவே, வங்கி அதிகாரிடளிடம் சென்று விசாரித்த போது பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் வந்திருக்கிறது என கூறியுள்ளனர். 
 
ஆனால், அவரோ நான் எந்த திட்டதிற்கும் பணம் பெற விண்ணப்பிக்கவில்லை என கூறியுள்ளார். ஒருவேளை அதிகாரிகள் தவறாக வேறு பயனாளிக்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக எனக்கு அனுப்பி விட்டார்களா? என்றும் சந்தேக கேள்வி எழுப்பியுள்ளார். 
 
ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் எனது வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பி தந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.