வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (17:21 IST)

அ.தி.மு.கவை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறாரா துணைமுதல்வர்...?

அ.தி.மு.கவுடன், அ.ம.மு.க இணைத்தால் தான் ஆட்சியைக் காப்பாற்ற முடியும். அ.தி.மு.க - அ.ம.மு.க ஒன்று சேர்வத்ற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் செய்து கொண்டிருக்கிறார் .

டி.டி வி தினகரனை ஒபிஎஸ் சந்தித்தது தொண்டர்களாகிய எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருகிறது. திமுகவை வேரறுக்க வேண்டும் என்றால் அதிமுக - அமமுக ஒன்றிணைய வேண்டும்.

தலைமை ஒரு நல்ல முடிவு எடுத்து தொண்டகர்களிடம் அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.மேலும்  தினகரனை துணைமுதல்வர் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என்று சூலூர் எம்.எல்.ஏ.கனகராஜ் கூறியுள்ளார்.
 
இது ஒருபுறம் இருக்க ஒ.பி.எஸ்வுடன் சந்திப்பு நடந்தது உண்மைதான்  என்றும், அந்த சந்திப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விட்டுவிட்டு என்னுடன் வருவதாகா ஒ.பி.எஸ் கூறினார் என்று தினகரன்தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது: தங்கமணியை முதல்வராக்கினால் ஆதரவளிப்பீர்களா என்று நண்பர் ஒருவரிடம் கேட்டார். முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

ஒபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை, அதனால்தான்  அவர்கள் இருவரும் தங்களுக்குப் பின்னே சதித்திட்டம் தீட்டி வைத்துள்ளனர். ஓபிஎஸ் எங்களது ஸ்லீப்பர் செல் இல்லை.எப்படியாவதும் முதலமைச்சர் பதவியை அடைந்து விட துடிக்கிறார் அவர்.

ஒன்றாக இணைவது தொடர்பாக ஒபிஎஸ் அவரது மகன் ஆகியோர் என்னை அழைத்தனர். அதற்கான நேரமும் ஒதுக்குமாறு என்னிடம்  கேட்டனர். அந்த சந்திப்பின் போது தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என மன்னிப்பு கேட்டார். மேலும் ஓ.பி.எஸ் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதற்கு முற்றுபுள்ளி வைக்கவே இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தேன் என்று தினகரன் கூறியுள்ளார்.
 
எந்த நண்பர் வீட்டில் சந்திப்பு நடந்தது  என்ற ஆதாரத்தை கேட்டால் தான் வழங்க தாயார் என்று தினகரன் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.