1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (13:52 IST)

அதிமுக 5 ஆண்டு வாரண்டி கொண்ட எல்இடி பல்ப்: ஃபுள் ஃபார்மில் தம்பிதுரை

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக வலுவிழந்த கட்சியாகவே காணப்படுகிறது. இதனையே எதிர்கட்சியும் முன்நிறுத்தி விமர்சித்து வருகிறது. மேலும், தற்போது நடந்து வரும் ஆட்சி விரைவில் கலையும் எனவும் கூறப்படுகிறது. 
 
தற்போதெல்லாம் அர்சியல் ரீதியாக விமர்சித்தல் என்ற பெயரில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கேலியான விமர்சனக்களை முன்வைக்கின்றனர். சிறு பிள்ளைகளை போல ஒருவர் மீது இருவர் குற்றம்சுமத்துவது தற்போதைய அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. 
 
சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசு அணைய போகும் விளக்கு என விமர்சித்தார். இது குறித்து அதிமுக எம்பி தம்பிதுரையிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார். 
 
ஸ்டாலின் கூறுவது போல் அதிமுக ஒன்றும் விளக்கு இல்லை. 5 ஆண்டுகள் வாரண்டியுடன் சுடர்விடப்போகும் எல்இடி பல்பு. அதிமுக அணையா விளக்கே தவிர, அணையும் தீபம் இல்லை என பதில் அளித்துள்ளார்.