1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 5 அக்டோபர் 2018 (14:49 IST)

'தொண்டர்களுக்குத் தோள் கொடுப்பேன்' : உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கடந்த சில நாட்களூக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி அதிமுக  நிகழச்சியில் பேசும் போது திமுக 'கட்சியல்ல அது ஒரு கம்பெனி’ என்று காரசாரமாக விமர்சித்திருந்தார்.
முதல்வர் இப்படி விமர்சித்த மறுநாளே, திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமுக வலைதளத்தில் சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பு இல்லாத அடிமைகளுக்கும் எங்கள் கட்சியை விமர்க்க துளிகூட தகுதியில்லை என்று வார்த்தைகளால் பதிலடி கொடுத்திருந்தார்.
 
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாட்சி அருகேவுள்ள பணப்பட்டி கிராமத்தில் அதிமுக எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
இதில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
 
என்னை திமுகவின் அரசியல் வாரிசு என்று கூறுகின்றனர். ஆனால் நான் கட்சியில் எந்த உயர்ந்த பதவிக்கும் போக மாட்டேன். கடைசிவரைக்கும் கட்சியில் தொண்டனாகவே இருந்து தொண்டர்களுக்குத் தோள் கொடுப்பேன். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறகு நான் வரிசையில் நிற்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆமாம் நான்  வரிசையில்தான் நிற்கிறேன். ஆனால் இது பதவிக்கான வரிசை இல்லை. தொண்டர்களின் வரிசை. இவ்வாறு அவர் கூறினார்.