1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (09:06 IST)

புழல் சிறையில் முஸ்லிம் கைதிகள் தாக்குதல் – அடிப்படை உரிமைகளை மறுக்கிறாரா சிறைத்துறை எஸ்.பி ?

புழல் சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ள இரு இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புழல் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகிய இரண்டு பேரையும் சிறைத்துறை எஸ்.பி செந்தில்குமார் கடுமையாக தாக்கியுள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி இருவரிடமும் கேள்வி எழுப்பிய எஸ்.பி-ஐ அவர்கள் இருவரும் தாக்கியதாக சிறைத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ‘எஸ்.பி செந்தில்குமாரின் தாக்குதலைத் தொடர்ந்து கைதிகள் இருவரும் சிறைக்குள்ளாகவே உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.  புழல் சிறை எஸ்.பி. செந்தில்குமார் தொடர்ந்து மேற்கொண்டுவரும் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மறுப்பு மற்றும் அடக்குமுறையின் தொடர்ச்சியாகத் தான் முஸ்லிம் விசாரணைக் கைதிகள் மீது தாக்குதலும், வழக்குப் பதிவும் நடைபெற்றுள்ளது. நன்னடைத்தையை போதிக்க வேண்டிய சிறைச்சாலையில் இத்தகைய கடும்போக்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளால் சிறைவாசிகள் மென்மேலும் மனதளவில் பாதிக்கப்படக் கூடிய நிலையே உருவாகும். ஆகவே, தமிழக அரசு புழல் சிறையின் எஸ்.பி. செந்தில்குமார் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் முபாரக் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.