திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 மே 2018 (20:12 IST)

ஜட்டியால் தற்கொலை செய்வது சாத்தியமா? சிற்றரசு மரணத்தில் புதிய தகவல்!

காஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலையத்தில் இறந்த சிற்றரசு கழிவறையில் ஜட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

 
காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சிற்றரசு என்பவருக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் நிலம் தொடர்பான பிரச்சனை வெகு நாட்களாக இருந்துள்ளது. இதுதொடர்பாக சிற்றரசு கடந்த மே 1ஆம் தேதி சூனாம்பேடு காவல்நிலையற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
 
மறுநாள் சிற்றரசு மர்மமான முறையில் இறந்துவிட்டர். சிற்றரசுவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். சிற்றரசுவை காவல்துறையினர்தான் அடித்து கொலை செய்துவிட்டதாக அவரது உறவினர்கள் கூறினர்.
 
இதைத்தொடந்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சிற்றரசுவின் உறவினர்கள் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பான விரிவான ஆய்வை நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அரசு மருத்துவர் புகழேந்தி. 
 
அதில், சூனாம்பேடு காவல்நிலையத்தில் சிற்றரசு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த மரணத்தில் காவல்துறையினரின் நிலைபாடு, சிற்றரசு கழிவறையில் தனது ஜட்டியை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்த அறிக்கையில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மட்டுமே சிற்றரசு மரணத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
 
அதில் சில முக்கியமான கேள்விகள்;
 
ஒரே ஒரு ஜட்டி துணையுடன் தாழ்பாளில் ஒரு முனையை மாட்டி கழுத்தைச் சுற்றி தூக்கிட்டு தற்கொலை செய்சது சாத்தியமா? அதுவும் முடிசு இல்லாமல் இருந்தால் ஜட்டியின் அளவை கணக்கில் கொண்டால் இது சாத்தியம்தானா? என்ற அருமையான கேள்வியை முன்வைத்துள்ளார்.