புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (11:22 IST)

ஏ.டி.எம்.மில் 29 ஆயிரம் பறிகொடுத்த சிறுமி - வேதனையில் தூக்கிட்டு தற்கொலை

டெல்லியில் ஏ.டி.எம்.மில் 29 ஆயிரம்  பறிகொடுத்த சிறுமி துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பாரத் விகார் காலனியைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவர் தனது மகளான நிஷாவிடம்(16), 6,000 ரூபாயை ஏடிஎம்மில் இருந்து எடுத்து வருமாறு கூறியுள்ளார். நிஷா  பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்துக்கு சென்றுள்ளார். பணம் எடுத்துக் கொண்டு திரும்பிய நிஷாவிடம், அங்கிருந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் கார்டை சொருகி பேலன்ஸ் ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து சிறுமியும் ஏ.டி.எம் கார்டை சொருகி பேலன்ஸ் ரசீது பெற்றுள்ளார். பின் அந்த திருடர்கள், ஸ்கிம்மர் டிவைஸ் மூலம் ஏடிஎம் கார்டின் தகவல்களை திருடி, அதிலிருந்த 29,000 ரூபாயை திருடியுள்ளனர்.
 
இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய சிறுமியிடம், ரஞ்சித் தாஸ் ஏன் இவ்வளவு பணத்தை எடுத்தாய் என கேட்டுள்ளார்.அப்போது தான், அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை ஏமாற்றியிருப்பதும், ஏடிஎம் கார்டை சொருகி 29,000 ரூபாயை மோசடி செய்திருப்பதும் நிஷா உணர்ந்தார்.
இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் யாருமில்லா நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், நிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்துவழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.