செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (11:40 IST)

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா.? தினந்தோறும் இதை செய்யுங்கள்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

Subramaniyam
கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
 
இந்தியாவில் சுமார் 174.94 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், பக்க விளைவுகள் ஏற்படும் என மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பலரும் தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பீதியில் உள்ளனர்.
 
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.


எந்த தடுப்பூசியாக இருந்தாலும் ஒருவருடைய உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்துத்தான் இருக்கும் என்று தெரிவித்தார். யாரும் பதற்றத்துடன் இருக்க வேண்டாம் என்றும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்து உடலை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.