திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (16:30 IST)

மீண்டும் தலைதூக்குகிறதா பெண் சிசுக் கொலை?

உசிலம்பட்டி வீட்டிலேயே நடத்தப்பட்ட கருக்கலைப்பின் போது அருகே மூன்று பெண் குழந்தைகளின் தாய் உயிரிழப்பு.



தமிழகத்தில், அதுவும் குறிப்பாக தென் தமிழக பகுதிகளில் கடந்த காலங்களில் பெண் சிசுக் கொலை மிகவும் அதிகளவில் நடந்து வந்தது. அரசு அதை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்து பெண்சிசுக் கொலை எண்ணிக்கையைக் குறைத்தது. மருத்துவமணை மற்றும் ஸ்கேன் செண்டர்களில் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிவிக்கக் கூடாது என்றும் அதை மீறினால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள உத்தப்புரம் எனும் ஊரில் ராமுத்தாயி(30) மற்றும் ராமர் தம்பதியினர் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ராமுத்தாயி மீண்டும் கர்ப்பமாக இருப்பதை அறிந்து இந்த குழந்தையும் பெண் குழந்தையாகவே இருக்கும் எனும் சந்தேகத்தில் கருக்கலைப்புக்கு ஒரு தனியார் மருத்துவமணையை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்து விடவே அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவரின் தவறான வழிகாட்டலால் வீட்டிலேயே கருக்கலைப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர். பாதுகாப்பற்ற அந்த கருக்கலைப்பின் போது ராமுத்தாயியின் உயிர் பிரிந்ததது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் அந்த செவிலியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.